Skip to content

Latest commit

 

History

History
40 lines (40 loc) · 5.5 KB

decade.md

File metadata and controls

40 lines (40 loc) · 5.5 KB
  1. உனக்கு உயிர் வாழ ஆறு மாதங்கள் இருந்தால் என்ன செய்வாய்?
  2. உன்னிடம் நூறு கோடி டாலர்கள் இருந்தால் என்ன செய்வாய்?
  3. பத்தாண்டுகளுக்கு முந்தைய உனக்கு என்ன அறிவுரையை வழங்கிக் கொள்வாய்?  
  4. இப்போதிருந்து பத்தாண்டுகளுக்கு பின் எது மாறாதிருக்கும் என்று நம்புகிறாய்?
  5. இப்போதிருந்து பத்தாண்டுகளுக்கு பின் எது மாறியிருக்கும் என்று நம்புகிறாய்?
  6. பூரணமான மகிழ்ச்சி குறித்த உன் கருத்து என்ன?
  7. எங்கே எப்போது நீ மிகவும் மகிழ்ச்சியானவனாக இருந்தாய்?
  8. அதிகாலை படுக்கையில் இருந்து ஏன் எழுகிறாய்?
  9. துன்பத்தின் மாபெரும் பள்ளமாக எதை கருதுகிறாய்?
  10. உன்னுடைய மிகவும் குறிப்பிடத்தக்க பண்பு என்ன?
  11. உன்னுடைய மிகப்பெரிய அச்சம் என்ன?
  12. உன்னிடமுள்ள எந்த குணாம்சத்தை நீ பெரிதும் கண்டிக்கிறாய்?
  13. பிறரிடமுள்ள எந்த குணாம்சத்தை நீ பெரிதும் கண்டிக்கிறாய்?
  14. எத்தகைய சந்தர்ப்பத்தில் நீ பொய் சொல்வாய்?
  15. உன்னுடைய மிகப்பெரிய ஆடம்பரம் எது?
  16. மிகவும் மிகைப்படுத்தப்பட்ட அறமாக எதைக் கருதுகிறாய்?
  17. உன்னுடைய தோற்றம் குறித்து நீ பெரிதும் விரும்பாதது என்ன?
  18. நீ உன்னைக் குறித்து ஒரு விஷயத்தை மாற்றிக் கொள்ள முடியுமென்றால் அது என்னவாக இருக்கும்?
  19. எந்த திறமையை கொண்டிருக்க நீ மிகவும் விரும்புகிறாய்?
  20. மக்கள் உன்னிடம் எதைப் பற்றி அடிக்கடி தவறாக புரிந்து கொள்கிறார்கள்?
  21. ஒரு ஆணிடம் எந்த பண்பை நீ பெரிதும் விரும்புகிறாய்?
  22. ஒரு பெண்ணிடம் எந்த பண்பை நீ பெரிதும் விரும்புகிறாய்?
  23. உன் நண்பர்களிடம் எந்த விஷயத்திற்கு நீ பெரிதும் மதிப்பளிக்கிறாய்?
  24. எதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறாய்?
  25. உன்னால் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் ஒரு பரிசளிக்க முடிந்தால் அது என்னவாக இருக்கும்? 
  26. உன்னுடைய மிகப்பெரிய நேர விரயம் என்ன?
  27. நீ எதை வலிமிக்க ஆனால் செய்வதற்குரிய செயலாக கருதுகிறாய்?
  28. நீ எங்கே வாழ பெரிதும் விரும்புகிறாய்?
  29. உன்னுடைய மிகவும் பொக்கிஷமான உடைமை எது?
  30. உன்னுடைய சிறந்த நண்பர் யார்?
  31. உன் வாழ்வின் அரும்பெருங்காதல் எது அல்லது யார்?
  32. எந்த வாழும் மனிதரை நீ பெரிதும் வியந்து பார்க்கிறாய்?
  33. உன்னுடைய புனைவு கதாநாயகன் யார்?
  34. எந்த வரலாற்று ஆளுமையோடு நீ பெரிதும் அடையாளப்படுத்திக்  கொள்கிறாய்?
  35. உன்னுடைய மிகப்பெரிய வருத்தம் என்ன?
  36. நீ எவ்வாறு இறக்க விரும்புகிறாய்?
  37. உன்னுடைய வழிகாட்டிக் கொள்கை என்ன?
  38. நீ இதுவரையில் பெற்ற மிகச்சிறந்த பாராட்டு என்ன?
  39. உனக்கு நடந்த மிகவும் அதிர்ஷ்டகரமான சம்பவம் என்ன?
  40. எது உன்னை நம்பிக்கை கொள்ள வைக்கிறது?